Categories
டெக்னாலஜி

வாட்ஸ்அப்பில் மேலும் 2 புதிய அம்சங்கள்…. அடுத்தடுத்த அசத்தல் அறிவிப்பு….!!!!

உலகம் முழுவதுமே பில்லியன் கணக்கான மக்கள் வாட்ஸ் அப்பை பயன்படுத்தி வருகிறார்கள். மேலும் பயனர்களுடைய வசதிக்காக whatsapp பல்வேறு சேவைகளையும், அப்டேட்டுகளையும் வழங்கி வருகிறது. கல்வி, தொழில், பண பரிமாற்றும் முதலான அனைத்து தேவைகளுக்கும் whatsapp பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் 2 புதிய அம்சங்களை வாட்ஸ்அப்பில் கொண்டு வருவதாக மெட்டா நிர்வாகம் தெரிவித்துள்ளது. தனிநபருக்கோ அல்லது குழுவுக்கோ ஒரு குறிப்பிட்ட தேதியில் செய்தியை அனுப்ப திட்டமிடும் வசதியை கொண்டுவர உள்ளது. மேலும், இதுவரை புகைப்படம் அல்லது வீடியோவை Forward செய்தால் அதற்கு தலைப்பிட முடியாது. ஆனால், வரவுள்ள புதிய அம்சத்தில் தலைப்பிட முடியும்.

Categories

Tech |