வாட்ஸ்அப்-ல் மிக வலுவான மற்றும் பயன் உள்ள அம்சம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. அதாவது, வாட்ஸ்அப் காலிங் அம்சம் ஆகும். இது இப்போது அனைத்து பயனாளர்களாலும் பயன்படுத்தப்படுகிறது. இரு நபர்கள் பேசவும், குழுவாக சேர்ந்து உரையாடவும், இலவசமாக கிடைக்கும் இந்த அம்சம் வெகுவாக பயன்படுத்தப்படுகிறது.
பயனர்கள் இதுவரையிலும் இந்த வசதியை இலவசமாகப் பயன்படுத்தி வந்தாலும், இனிமேல் வரும் காலங்களில் வாட்ஸ்அப் பயனாளர்கள் இவ்வசதியை பயன்படுத்த ஒரு தொகையை செலுத்த வேண்டி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது பயனாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. வாட்ஸ்அப் விரைவில் இவ்வாறு செய்யக்கூடும் என்று தகவல் வெளியாகியுள்ளது.