இந்தியா உள்பட 84 நாடுகளை சேர்ந்த வாட்ஸ்அப் பயன்படுத்துபவர்களின் 50 கோடி செல்போன் எண்கள் விற்பனைக்கு வந்திருப்பதாக அதிர்ச்சியான தகவல் வெளியாகி இருக்கிறது. இது தொடர்பாக வெளியான அறிவிப்பில் “இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, எகிப்து போன்ற நாடுகளின் தரவுகளை ஹேக்கர் ஒருவர் விற்பனை செய்யவுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதாவது, 48 கோடியே 70 லட்சம் நபர்களின் மொபைல் எண்களானது விற்கப்பட இருப்பதாகவும் தெரிவித்து உள்ளது. ஒட்டுமொத்த அமெரிக்க பயனர்களின் செல்போன் எண்கள் மிகவும் மலிவாக 5 லட்சத்து 71 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. உலகம் முழுவதும் 220 கோடி நபர்கள் பயன்படுத்தும் வாட்ஸ்அப் செயலி பாதுகாப்பானது என மெட்டா நிறுவனம் கூறிவரும் நிலையில், இந்த ஹேக்கிங் தகவல் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.