வாட்ஸ் அப் செயலியில் வாடிக்கையாளர்களை கவரும் அடிப்படையில் அடிக்கடி பலவித அம்சங்கள் அறிமுகப்படுத்தப்படுகிறது. இதற்கிடையில் வாட்ஸ் அப்பில் நமக்கு தெரியாத பல விஷம் இருக்கிறது. அதுக்குறித்து இப்பதிவில் நாம் தெரிந்து கொள்வோம்.
# நீங்கள் ஆன்லைனில் உள்ளதை மற்றவர்கள் தெரிந்து கொள்ளாமல் இருக்க பிரைவசி செகஷனில் சில அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.
# ஒரு குறிப்பிட்ட உரையாடலிலிருந்து புகைப்படம் மற்றும் வீடியோக்கள் ஆட்டோமேட்டிக்காக சேவ் ஆவதை தவிர்க்க அதை ஆஃப் செய்துகொள்ளலாம்.
# ஸ்டார் ஐகானை பயன்படுத்தி முக்கியமான மெசேஜ்களை சேமித்து வைத்துக் கொள்ளலாம்.
# ப்ராட்கேஸ்ட் அம்சத்தை பயன்படுத்துவதன் வாயிலாக பல நபர்களுக்கு மெசேஜ்களை அனுப்பிக்கொள்ள இயலும்.
# வாட்ஸ்அப்-ஐ ஓபன் செய்யாமலேயே மெசேஜை ரகசியமாக படிக்க முடியும்.
# உங்களுக்கு நீங்களே மெசேஜ் செய்துகொள்ளும் அடிப்படையிலான அம்சம் விரைவில் வெளியாக இருக்கிறது.