Categories
Tech டெக்னாலஜி பல்சுவை

வாட்ஸ்அப் பயனாளர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. விரைவில் வெளியாகும் மாஸ் அப்டேட்….!!!

உலகின் முன்னணி சாட்டிங் செயலிகளில் ஒன்றான வாட்ஸ்அப் பல்வேறு அம்சங்களை வழங்கி வருகின்றது. அதுமட்டுமன்றி அவ்வப்போது புதிய அப்டேட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் வாட்ஸ்அப் புதிய அம்சம் ஒன்றை அறிமுகம் செய்ய உள்ளதாக தற்போது கூறியுள்ளது. அதன் மூலம் நமக்கு சேட்டில் வரும் போன் நம்பரை டேப் செய்தவுடன் அந்த நம்பர் வாட்ஸ் அப்பில் இருக்கின்றதா என ஆராயும், அது வாட்ஸ்அப்பில் இருந்தால் அவற்றிற்கு வாட்ஸ்அப் மெசேஜ் அனுப்பலாம் அல்லது கால் செய்யலாமா என கேட்கும்.

இதற்கு முன்பு சேட்டில் வரும் போன் நம்பரை டேப் செய்யும் போது கால் செய்யும் அம்சம் மட்டுமே இருந்தது. தற்போது பீட்டா பயனாளர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ள இந்த அம்சம் விரைவில் அனைவருக்கும் வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனைப் போலவே வாட்ஸ்அப் ஸ்மார்ட்போன்களில் வழங்கப்பட்டுள்ள ஒன் டைம் மெசேஜ் அம்சத்தை கணினியிலும் கொண்டுவருவதற்கு திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.

Categories

Tech |