Categories
Tech டெக்னாலஜி

வாட்ஸ்அப் பயனாளர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. இனி 32 பேருடன் குரூப் வாய்ஸ் கால்…. அசத்தலான அப்டேட்….!!!!

உலகில் முன்னணி குறுஞ்செய்தி செயலியாக வாட்ஸ்அப் திகழ்கிறது. அப்போது புதிய அப்டேட்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. அதனால் அதன் பயனாளிகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. தற்போது புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. வாட்ஸ்ஆப் செயலியின் இந்த புதிய அப்டேட் கொண்டே ஒரே சமயத்தில் 32 பெயருடன் வாட்ஸ்அப் குரூப் வாய்ஸ் கால் பேச முடியும். இதற்கு முன்னதாக 2020ஆம் ஆண்டு வாட்ஸ்அப் நிறுவனம் தனது செயலியில் குரூப் வாய்ஸ் கால் அம்சத்தில் பங்கேற்பவர்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்தியது.

அதனைத் தவிர ஒரே சாட் திரெட்- இல் அதிக பயனர்களை சேர்த்துக் கொள்ளும் வசதி, ரீ டிசைன் செய்யப்பட்ட லொகேஷன் ஸ்டிக்கர் மற்றும் அதிக ஏமோஜிகள், பிரைவஸி செட்டிங்களில் அதிக ஆப்ஷன்கள் என ஏராளமான அம்சங்கள் வழங்கப்பட்டன. இதையடுத்து தற்போது வாட்ஸ்அப் குரூப் காலில் புதிய அப்டேட் வெளியிடப்பட்டுள்ளது.அதன்படி வாட்ஸ்அப் குரூப் கால் செய்வோர் இனி அதிகபட்சமாக 32 பேர் உடன் வாய்ஸ் கால் பேச முடியும். அதே தகவல் வாட்ஸ்அப் வலைத்தளத்தில் FAQ என்ற பக்கத்தில் இடம் பெற்றுள்ளது.

இதற்கு முன்னதாக 4 பேருடன் வாய்ஸ் கால் பேசும் வசதி வழங்கப்பட்டு அதன் பிறகு அதன் எண்ணிக்கை ஏப்ரல் மாதம் 2020 ஆம் ஆண்டு இரு மடங்காக அதிகரிக்கப்பட்டது. தற்போது 32 பேர் பேசும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த அம்சம் வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு 2.22.8.80 வெர்ஷனில், ஐஓஎஸ் 2.2.9.73 வேர்ஷனிலும் வழங்கப்பட்டுள்ளது.

 

Categories

Tech |