Categories
பல்சுவை

வாட்ஸ்அப் பயன்படுத்துவோர் கவனத்திற்கு….. வெளியான அதிர்ச்சி தகவல்……!!!!

உலகெங்கிலும் உள்ள பல பில்லியன் கணக்கான மக்கள் பயன்படுத்தும் வாட்ஸ்அப்பில் பாதுகாப்பு சிக்கல் இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இது பற்றி அந்த நிறுவனம் இதுவரை எந்தவித நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்பது தான் வேதனை. உங்கள் வாட்ஸ்அப் மொபைல் எண் மட்டும் ஹேக்கர்களுக்கு தெரிந்தால் போதும், நீங்கள் ஹேக் செய்யப்பட வாய்ப்புள்ளது. தொலைபேசி எண்ணை கொண்டு ஹேக்கர்ஸ் வாட்ஸ்அப் இல் உள்நுழைய முயல்வார்கள். அதாவது லாகின் செய்ய முயல்வார்கள். வாட்ஸ்அப் இல் two-factor authentication system முறை நடைமுறையில் இருப்பதனால், எளிதாக கணக்கில் உள்நுழைய முடியாது. இதனையடுத்து அவர்கள் பல முறை லாகின் செய்ய முயல்கின்றனர்.

இதனால், நீங்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கும் உங்கள் வாட்ஸ்அப் கணக்கில் இருந்து, இனி உங்களால் லாக்கின் செய்ய அனுமதிக்கப்படமாட்டீர்கள். இதனையடுத்து ஹேக்கர்கள் இப்போது வாட்ஸ்அப் நிறுவனத்திற்கு ஒரு மின்னஞ்சல் செய்தியை அனுப்புவர். அதில் உங்களுடைய தொலைபேசி எண் தொலைந்துவிட்டது அல்லது திருடப்பட்டுள்ளது என்று கூறி, உங்கள் எண்ணுடன் தொடர்புடைய கணக்கு செயலிழக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிடுகின்றனர். வாட்ஸ்அப் நிறுவனம் ஒரு பதில் மின்னஞ்சலுடன் சரிபார்க்கிறது. மேலும், உங்கள் தரப்பிலிருந்து எந்த பதிலும் இல்லை என்றால் உங்கள் கணக்கை நிறுவனம் உடனே இடைநிறுத்தம் செய்துவிடும்.

உங்கள் கணக்கில் அரை நிரந்தர பூட்டை உருவாக்கிய ஹேக்கர்ஸ் தொடர்ச்சியாக பல முறை இதனை செய்தால் உங்கள் கணக்கு மொத்தமாக இடைநிறுத்தம் செய்யப்பட வாய்ப்புள்ளது. எனினும் இதில் உள்ள ஒரு ஆறுதலான விஷயம் என்னவென்றால் உங்கள் எந்தவொரு செய்தியையும், டேட்டாவையும் அவர்களால் அணுக முடியாது. ஆனால், எந்த தகவலும் இல்லாமல் உங்களின் கணக்கு இடைநிறுத்தம் செய்யப்படுவது தான் கவலை அளிக்கிறது. எனவே இனி முன்பின் தெரியாத இடங்களில் அல்லது நபர்களிடம் உங்களின் வாட்ஸ்அப் கணக்கு எண்ணைத் தெரியப்படுத்தாமல் முடிந்த அளவு பாதுகாப்பாக இருக்கலாம்.

Categories

Tech |