Categories
டெக்னாலஜி பல்சுவை

வாட்ஸ்அப்-பின் வீடியோ கால் அழைப்பை… இனி லேப்டாப்பிலும் பார்க்கலாம்… வாட்ஸ்அப் புதிய அறிமுகம்..!!

ஜூம், மீட்டிங் கூகுள் மீட்டிங் போன்ற வீடியோ கால் பயன்பாடுகளுக்கு போட்டியாக வாட்ஸ்அப் நிறுவனமும் கம்ப்யூட்டர் டெக்ஸ்டாப்பில் வாய்ஸ் மற்றும் வீடியோ கால் வசதியை அறிமுகம் செய்ய உள்ளது.

வாட்ஸ் அப் செயலியில் மெசேஜ் மூலம்  வாய்ஸ் கால் வீடியோ கால் செய்யும் வசதி ஏற்கனவே இருக்கும். கம்ப்யூட்டரிலும் கூட வாட்ஸ் அப் செயலியின் வாய்ஸ் கால் மற்றும் வீடியோ காலை செய்து கொள்ள முடியும். வெப்கேமரா மற்றும் மைக்ரோபோன் வசதி உள்ள  கம்ப்யூட்டர், லேப்டாப்பில் , வாட்ஸ்ஆப் வாய்ஸ் கால், வீடியோ கால் ஆப்ஷனை பயன்படுத்தி பயனாளர்கள் எளிதில் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது .

கம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப் மூலம் குரூப் கால் வசதியும் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது. முதற்கட்டமாக ஒரே நேரத்தில் ஒருவரிடம் மட்டுமே இந்த வீடியோ காலில் பேச முடியும். ஆனால் குழு அழைப்பு மற்றும் வீடியோ அழைப்புகளை எதிர்காலத்தில் சேர்க்க, இந்த அம்சத்தை விரிவுபடுத்தும் என்று கூறியுள்ளது. வாட்ஸ் அப் மெசேஜ்களுக்கு இருக்கும் end-to-end encryption ஆப்ஷனை போல் டெஸ்க்டாபில் பயன்படுத்தப்படும் வாட்ஸ் அப்பின் வாய்ஸ் மற்றும் வீடியோ காலுக்கும் end-to-end encryption ஆப்ஷன் இருப்பது உறுதி செய்துள்ளது.

இந்த புதிய அறிவிப்பை வாட்ஸ்அப்பில் இருந்து நேரடியாக கம்ப்யூட்டரில் லாகின் செய்து பயன் பெறலாம். அதாவது நீங்கள் அழைக்க விரும்பும் தொடர்புடன் தனிப்பட்ட அரட்டையைத் திறக்கவும். பிறகு வீடியோ அழைப்பு ஐகானைக் கிளிக் செய்க. இந்த வசதி தற்போது வீட்டிலிருந்து வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு  மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதால் வாட்ஸ் அப் பயனர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. வாட்ஸ் அப் வெப் குரல் மற்றும் வீடியோ அழைப்புகளின் புதிய அம்சம், ஜூம், கூகிள் மீட் போன்ற வீடியோ கால் பயன்பாடுகளுக்கு போட்டியாக இருக்கும் என்று வீடியோக்களை எடுத்துக்கொள்வதை நோக்கமாகக் கொண்டிருக்கும்.

Categories

Tech |