Categories
தேசிய செய்திகள்

வாட்ஸ்அப் பிரைவசி வழக்‍கு – உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி அதிரடி …!!

வாட்ஸ் அப் நிறுவனத்தின் புதிய பிரைவசிகளை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கில் அந்த நிறுவனமும், மத்திய அரசும் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வாட்ஸ்அப் நிறுவனம் அண்மையில் தனது பிரைவசிகளில் சில மாற்றங்களை செய்து உள்ளது. அதில் வாடிக்கையாளர்கள் தங்கள் விவரங்களை பேஸ்புக் நிறுவனத்திடம் பகிர்ந்து கொள்ள ஒப்புதல் அளிக்க வேண்டுமென வாட்ஸ்அப் நிறுவனம் புதிய விதிமுறையை வகுத்து இருந்தது.

இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. மக்கள் தங்களது தனிப்பட்ட தகவல்களை பெரிதாக கருதுவதாக தெரிவித்த நீதிபதிகள், அவற்றை பாதுகாப்பது நமது கடமை என தெரிவித்தனர்.

மேலும் ஐரோப்பிய நாடுகளைப் போல் தனிப்பட்ட தகவல்களை பாதுகாக்க புதிய பிரைவசி கொள்கை இந்தியாவில் ஏற்படுத்தப்பட்டால் அதைப் பின்பற்ற தயார் என தெரிவித்த நீதிபதிகள், வாட்ஸ்அப் –  பேஸ்புக் நிறுவனங்கள் மற்றும் மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவிட்டனர்.

Categories

Tech |