உலகம் முழுதும் ஏராளமானவர்கள் பயன்படுத்தப்படும் மெசேஜிங் செயலியான வாட்ஸ்அப், பில்லியன் கணக்கான வாடிக்கையாளர்களைக் கொண்டிருக்கிறது. மிக எளிதாக அனைவரும் பயன்படுத்த முடியும் என்பது வாட்ஸ்அப் செயலியின் சிறந்த அம்சமாக உள்ளதால் இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் அதை பயன்படுத்துகின்றனர். அத்துடன் புகைப்படங்கள், வீடியோக்களையும் நீங்கள் மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள முடியும்.
நண்பர்கள், குடும்ப உறுப்பினர்களுடன் எங்கு இருந்தாலும் வீடியோகால் செய்து பேசிக்கொள்ளலாம். இதுதவிர்த்து முக்கிய பைல்கள் புகைப்படங்களையும் நீங்கள் பேக்அப் செய்துகொள்ளும் வசதியையும் வாட்ஸ்அப் கொடுக்கிறது. எடுத்துக்காட்டாக வாடிக்கையாளர்கள் கூகுள் டிரைவ், ஐ கிளவுட் வாயிலாக வாட்ஸ்அப் பைல்களை நீங்கள் பேக்அப் எடுத்து வைத்துக்கொள்ளலாம். இவற்றில் பேக்அப் எடுக்க விரும்பாத வாடிக்கையாளர்களுக்கு ஆப்லைனில் பைல்களை பேக்அப் எடுத்துக்கொள்ளும் வசதியும் உள்ளது.
ஆப்லைனில் வாட்ஸ் அப் பேக்அப் செய்வது எவ்வாறு?
ஆண்ராய்டு மொபைலை நீங்கள் பயன்படுத்துபவராக இருப்பின், உங்களது பைல்களை நீங்கள் internal storageல் சேமித்து வைத்துக்கொள்ளலாம். வாட்ஸ் அப் போட்டோ, வீடியோ, GIFs என அனைத்தும் தனிதனி folder-களாக சேமித்துவைக்கப்படும். அதற்கு முதலாவதாக உங்களது மொபைலில் Internal Storage மெனுவுக்கு செல்லவும். அங்கு Androidd> media>-ல் com.whatsapp> பக்கத்தை கிளிக் செய்து அவற்றில் WhatsApp> ஆப்சனுக்கு செல்லவும். அதன்பின் வாட்ஸ்அப் folderல் sub-folders இருக்கும். WhatsApp Animated Gifs, WhatsApp Audio, WhatsApp Images and WhatsApp Video எனத் தனித் தனியாக கொடுக்கப்பட்டு இருக்கும்.
அதில் உள்ள தகவல்களை நீங்கள் ஆப்லைனில் கணினி (அ) லேப்டாப்பில் பேக்அப் செய்து, பிறகு உங்கள் external hard drive-ல் சேமித்துக்கொள்ளலாம். அதற்கு உங்களது போனை கணினி (அ) லேப்டாப்பில் கனெக்ட்செய்து, மேலே கொடுக்கப்பட்டுள்ளவாறு வாட்ஸ்அப் folder பக்கம் சென்று copy செய்து பேக்அப் எடுத்துக்கொள்ளலாம். குறிப்பிட்ட folder (அ) மொத்தமாகவும் பேக்அப் எடுத்துக்கொள்ளலாம். புது போனில் வாட்அப் reinstall செய்யும்போது உங்களுக்கு தேவையான பைல்களை இதில் இருந்து மாற்றிக்கொள்ளலாம்.