Categories
டெக்னாலஜி பல்சுவை

வாட்ஸ்அப் மூலம் பணம் அனுப்புவது எப்படி…? வாங்க தெரிஞ்சுக்கலாம்..!!

வாட்ஸ்அப் மூலம் பணம் அனுப்பும் வசதி அண்மையில் வெளியான நிலையில், அதனை எப்படி அனுப்புவது என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.

வாட்ஸ்அப் பயனர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வரும் நிலையில், புதிதாக பல அம்சங்களை வழங்கி வருகிறது. அதன்படி, தற்போது வாட்ஸ்அப் மூலம் பணப் பரிவர்த்தனை செய்யும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. UPI அடிப்படையிலான கட்டண முறையான வாட்ஸ்அப் பே அம்சத்தை இந்தியாவில் தொடங்க இந்திய தேசிய கட்டண கழகம் (NPCI) ஒப்புதல் அளித்துள்ளது. ஆனால் இந்த அம்சத்தை உபயோகிக்க, 20 மில்லியன் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது.

அதன்படி, உங்களின் வாட்ஸ்அப் மூலம் உங்களின் நண்பருக்கு வாட்ஸ்அப் வழியாகவே எளிதாக பணம் பரிவர்த்தனை செய்யலாம். சமீபத்திய வாட்ஸ்அப் அப்டேட்டில் இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம். முதல்கட்டமாக குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே இந்த சேவை கிடைப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

வாட்ஸ்அப் பே மூலம் பணம் அனுப்பும் முறைகள்:

நீங்க யாருக்கு பணம் அனுப்ப வேண்டுமோ, அவரின் சாட்க்குள் செல்லவும். பின் சாட் பாக்ஸில் பின் (pin) ஐகான் இருக்கும். அதனை தேர்வு செய்து, பெமென்ட் (payment) ஐகானை தேர்வு செய்யவும். அதன்பின் எவ்வளவு பணம் அனுப்புகிறீர்கள் என்பதை என்டர் செய்து, உங்களின் UPI ஐடியை பதிவு செய்யவும். பணம் சென்றடைந்தால், உங்களின் சாட்-ல் நீங்கள் அனுப்பிய தொகை சென்றடைந்தது என்பது போல ஒரு குட்டி காலம் (column) தெரியும்.

முக்கியமான விஷயம் என்னவென்றால் நீங்கள் வாட்ஸ் ஆப் ஓப்பன் செய்துள்ள மொபைல் எண் அந்த வங்கிக் கணக்கோடு இணைக்கப்பட்டிருந்தால் மட்டுமே இந்த வசதியைப் பெற முடியும். உங்களது வங்கிக் கணக்கில் யூபிஐ ஐடி இணைக்கப்பட்டிருந்தால் நீங்கள் நேரடியாக PIN எண் பதிவிட்டு ஓப்பன் செய்யமுடியும். அப்படி இணைக்கப்படாமல் இருந்தால் உங்களது டெபிட் கார்டில் உள்ள கடைசி ஆறு இலக்க எண்கள் மற்றும் காலாவதி தேதி விவரங்களைப் பதிவிட்டு நீங்கள் இணைக்கலாம்.

Categories

Tech |