Categories
Tech டெக்னாலஜி

வாட்ஸ்அப் யுபிஐ மூலம் ரூ.1 அனுப்பினால்…. ரூ.105 கேஷ்பேக்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

இன்றைய காலகட்டத்தில் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். அதன்படி பயனாளர்களுக்கு ஏற்றவாறு வாட்ஸ்அப் நிறுவனம் அவ்வப்போது புதிய அப்டேட்களை வெளியிட்டு வருகிறது. தற்போது யுபிஐ பரிவர்த்தனை அதிகரித்து விட்டதால் வாட்ஸ்அப் யுபிஐ பரிவர்த்தனையை கொண்டு வந்தது. இந்நிலையில் புதிய அறிவிப்பு ஒன்றை வாட்ஸ்அப் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அதன்படி வாட்ஸ் அப் யுபிஐ மூலம் மூன்று பேருக்கு தலா ஒரு ரூபாய் அனுப்பினால் 105 ரூபாய் கேஷ்பேக் உங்களுக்கு கிடைக்கும். உங்கள் வாட்ஸ் அப் செயலியில் Payments ஆக்ஷன் அப்டேட் ஆகி இருக்க வேண்டும். வாட்ஸ்அப் பிசினஸ் அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள் இந்த சலுகையை பெற முடியாது. நீங்கள் பணம் அனுப்பும் நபர்கள் அவர்களது வங்கிக் கணக்கை வாட்சப்பில் இணைத்து இருக்க வேண்டும். மூன்று பரிவர்த்தனைக்கும் தலா 35 ரூபாய் வீதம் மொத்தம் உங்களுக்கு 105 ரூபாய் கிடைக்கும். இந்த புதிய அறிவிப்பு வாட்ஸ்அப் பயனர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |