வெப் வாட்ஸ்அப் உபயோகிப்பவர்களின் அலைபேசி எண் கூகுள் தேடலில் வரும் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது
வாட்ஸ்அப் செயலி சமீப நாட்களாக அதன் தனி உரிமை கொள்கைகளில் கவனம் செலுத்தி வருகின்றது. இதனிடையே தற்போது பயனர்களின் தரவுகளை வெளியிடுவதாக புதிய குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆரம்பத்தில் வாட்ஸ் அப் செயலி மொபைல் போன்களில் மட்டும் உபயோகப்படுத்த பட்டிருந்தாலும் தற்போது வேலை நிமித்தமாக பலர் தங்கள் கணினியிலும் மடி கணினியிலும் வாட்ஸ் அப் வெப் மூலமாக பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் வெப் வாட்ஸ்அப் பயன்படுத்துபவர்களின் தொலைபேசி எண் கூகுள் தேடலில் வெளியாவதாக சைபர் செக்யூரிட்டி சேர்ந்த ராஜ்சேகர் என்பவர் கூறியுள்ளார்.
இந்த வாரத்தின் தொடக்கத்தில் தனிப்பட்ட குழுவின் சேர்வதற்கான லிங்குகள் கூகுள் தேடுதளத்தில் கிடைக்கப்பெற்றது. இதுகுறித்து வாட்ஸ்அப் கூறுகையில் கூகுள் நிறுவனத்திடம் இது போன்றவற்றை தேடலில் கொடுக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டதாகவும் அதே நேரம் பயனர்களிடம் குழுவின் உரையாடலை பகிரங்கமாக பகிர வேண்டாம் என்று கூறப்பட்டதாக தெரிவித்தது. கூகுளில் வெளியான லிங்குகள் மூலமாக யார் வேண்டுமானாலும் தனிப்பட்ட குழுவில் இணைய வாய்ப்பு இருக்கிறது என்பதால் அந்த குறிப்பிட்ட தேடல் முடிவுகளை கூகுள் நிறுவனம் நீக்கியது.
அதேபோன்று வெப் வாட்ஸ்அப் உபயோகிப்பவர்களின் தொலைபேசி எண் கூகுள் தேடலில் வருகிறது என சைபர் செக்யூரிட்டி ஆராய்ச்சியாளர் ராஜ்சேகர் குறிப்பிட்டுள்ளார். வாட்ஸ் அப் செயலியில் தனியுரிமை மற்றும் கொள்கைகளில் மாற்றம் செய்து கொண்டிருக்கும் நிலையில் இது போன்ற மற்றொரு புகார் வந்திருப்பது பயனர்களிடையே இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே புதிதாக கொண்டுவர இருக்கும் தனியுரிமை கொள்கை தொடர்பாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் தனிமனிதனின் உரிமைகளை அபகரிக்கும் செயல் என வழக்கு தொடுக்கப் பட்டிருந்தது. அந்த வழக்கு நாளை நடைபெற இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.