Categories
மாநில செய்திகள்

வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்…. மனமுடைந்த பிளஸ்-2 மாணவி தற்கொலை…. பெரும் அதிர்ச்சி சம்பவம்….!!!!

தோழிகளுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக பிளஸ் 2 மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கூலித்தொழிலாளி காமராஜ் என்பவர் வசித்துவருகிறார். இவருக்கு 17 வயதில் கீர்த்தனா என்ற மகள் உள்ளார். இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். தற்போது பிளஸ் டூ தேர்வு முடிவடைந்த நிலையில் டைப்ரைட்டிங் இன்ஸ்டிட்யூட்டில் டைப்பிங் கற்று வருகிறார்.

இந்நிலையில் கீர்த்தனா நேற்று மதியம் தன் வீட்டின் அருகில் உள்ள 60 அடி ஆழம் கொண்ட கிணற்றின் விழிம்பில் நின்று கொண்டு தன் உறவினர் மனோஜ் என்பவரை செல்போன் மூலமாக தொடர்பு கொண்டுள்ளார். அப்போது நான் வீட்டின் அருகில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொள்ளப் போகிறேன் என தெரிவித்து விட்டு, அவர் பதில் கூறுவதற்கு முன்பே செல்போனை ஆஃப் செய்யாமல் வீசிவிட்டு கிணற்றில் குதித்து விட்டார். அதனால் அதிர்ச்சி அடைந்த மனோஜ் உடனே அப்பகுதியை சேர்ந்த பிரபாகரன் என்பவரை தொடர்பு கொண்டே கீர்த்தனாவை காப்பாற்றுமாறு கூறியுள்ளார்.

அதன் பிறகு பிரபாகரன் அங்கு சென்று பார்த்தபோது கிணற்றின் அருகில் கீர்த்தனாவின் செருப்பும் செல்போனும் கிடந்துள்ளது. இதுகுறித்து உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பிறகு சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் உயிரிழந்த நிலையில் கீர்த்தனாவின் உடலை மீட்டனர். அவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து கீர்த்தனாவின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் விசாரணையில் செல்போனில் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைப்பது தொடர்பாக தனது தோழிகளுடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக மன உளைச்சல் அடைந்த கீர்த்தனா தற்கொலை செய்துகொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |