Categories
தேசிய செய்திகள்

வாட்ஸ் அஃப்புக்கு வந்த போட்டோ…. போலீஸ் நிலையம் ஓடிய நபர்…. போலீஸ் விசாரணையில் பகீர் …!!

நபர் ஒருவர் முன்பின் தெரியாத நபரின் வாட்ஸ் அஃப் பக்கத்திற்கு தனது நிர்வாண படங்களை அனுப்பிய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த நபர் ஒருவருக்கு, அவருடைய ஒரே வாட்ஸ் அஃப் பக்கத்திற்கு முன்பின் தெரியாத ஒரு செல்போன் நம்பரிலிருந்து புகைப்படங்கள் வந்துள்ளன. இதனால் அதை அவர் டவுன்லோட் செய்து பார்த்தபோது அதில் ஒரு வயதான நபரின் நிர்வாண படங்கள் இருந்ததைக்  கண்டு அதிர்ச்சியடைந்த அந்த நபர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து  காவல்துறையினர் அந்த நம்பரை டிரேஸ் செய்து பார்த்ததில் அது 54 வயதான ராமகிருஷ்ணா என்பவர் என்பது தெரியவந்துள்ளது.

பின்னர் காவல்துறையினர் அவரை கைது செய்து செல்போனை பறிமுதல் செய்துள்ளனர். இந்நிலையில் காவல்துறையினரின் விசாரணையில், ராமகிருஷ்ணா குத்துமதிப்பாக தனக்கு கிடைத்த செல்போன் நம்பர்களுக்கெல்லாம் தன்னுடைய நிர்வாண படங்களை அனுப்புவதாக உண்மையை ஒப்புக் கொண்டுள்ளார். மேலும் அவருடைய செல்போனை பார்த்தபோது அதில் 200க்கும் அதிகமான நபர்களுக்கு தனது நிர்வாணப் படங்களை அனுப்பியது தெரியவந்ததுள்ளது. இதையடுத்து இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |