whatsapp நிறுவன புதிதாக பால அப்டேட்களை பயனர்களுக்கு வழங்கி வருகிறது. அதன்படி தற்போது புதிய அப்டேட்டை வழங்கி உள்ளது. அதில் முக்கிய மேம்பாடுகளாக கூடுதல் நபர்களைக் கொண்ட வாட்ஸ் அப் குழு, ஸ்கிரீன் ஷாட் வசதி ஒருமுறை மட்டுமே பார்க்கக்கூடிய போட்டோ மற்றும் வீடியோ வசதி ஆவணங்களை பகிர்தல் போன்ற வசதிகள் இடம் பெற உள்ளது மேலும் புதிதாக Whatsapp Premium வசதிகள் அதன் whatsapp பிசினஸ் பயனர்களுக்கு வழங்க அந்த நிறுவனம் முடிவெடுத்துள்ளது. இந்த வசதி தற்போது உருவாக்கத்தில் இருக்கிறது.
- இப்போது புதிய வசதியாக வாட்ஸப் பயனர்கள் தகவல் அனுப்பியுடன் அதனை எடிட் செய்து கொள்ளும் வசதியை ஏற்படுத்த போவதாகவும் தெரிவித்துள்ளது. ட்விட்டரில் சமீபத்தில் அந்த 15 நிமிடங்களில் எடிட் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் புதிதாக Edit Lable கொண்ட சேட் பபுள் இடம் பெற்றுள்ளது. இது தற்போது பீட்டா டெஸ்டிங் கொண்டு உள்ளது.
- வாட்ஸ் அப் குழுவில் அதிகபட்சமாக 512 நபர்கள் பங்கு பெற முடியும். ஆனால் தற்போது இந்த குழுவில் 1024 நபர்கள் பங்கேற்கலாம். இந்த செயலிக்கு போட்டியாளராக இருக்கும் டெலிகிராம் செயலில் இரண்டு லட்சம் பேர் பங்கிற்க முடியும்.
- அதுமட்டுமில்லாமல் தற்போது வாட்ஸ் அப் மூலம் அனுப்பப்படும் போட்டோ, வீடியோ,GIF, caption கொண்டு அனுப்பலாம். இதன் மூலம் ஆவணங்களை அனுப்பவும், ஏற்கனவே நமக்கு அனுப்பப்பட்ட ஆவணங்களை தேடி மீண்டும் எடுக்கவும் முடியும்.
- ஒரு முறை மட்டுமே பார்க்கக்கூடிய போட்டோ மற்றும் வீடியோக்களை ஸ்க்ரீன்ஷாட் எடுக்க முடியாத வகையில் ஆப்ஷன்கள் வரவுள்ளது. இதன் மூலம் நாம் ஒருமுறை மட்டுமே பார்க்க முடியும் போட்டோ மற்றும் வீடியோக்கள் பாதுகாப்பாக இருக்கும்.
- இறுதியாக புதிதாக whatsapp பிசினஸ் செயலி பயன்படுத்தும் பயனர்கள் அதில் சில முக்கிய வசதிகளை பயன்படுத்த பிரீமியம் சேவை கட்டணங்களை வழங்க வேண்டிய ஆப்சன்கள் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இது தற்போது BETA வடிவில் டெஸ்டிங் செய்யப்படுகிறது.