Categories
Tech

வாட்ஸ் அப்பில் டிஜிட்டல் அவதார் அம்சம்…. இனி ஒரே ஜாலிதான்…. பயனர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்….!!!!

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வருகின்றனர். பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு வாட்ஸ்அப் நிறுவனம் தினம் தோறும் புது புது அப்டேட்டுகளை வெளியிட்டு வருகிறது. அவ்வகையில் சமீபத்தில் 1024 பேர் இணையும் அளவுக்கு வாட்ஸ் அப் குரூப் வசதி ஏற்படுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து தற்போது அவதார் ஸ்டிக்கர் கொண்டுவரப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த அம்சம் facebook மற்றும் இன்ஸ்டாகிராம் செயலியில் இருக்கும் பட்சத்தில் தற்போது வாட்ஸ் அப் செயலிலும் அவதார அம்சம் கொண்டுவரப்பட்டுள்ளது.

இதன் மூலமாக ஷாட்களில் எளிதாக அவதார் ஸ்டிக்கர்களை அனுப்பலாம்.அதனை பெற வாட்ஸ் அப்பில் எமோஜி ஆப்ஷனுக்கு சென்று அவதார் என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்து அவதாரை நீங்களே உருவாக்கிக் கொள்ளலாம். இந்த அவதாரின் புதிய அப்டேட் தற்போது கொண்டுவரப்பட்டது. அதாவது டிஜிட்டல் அவதார் களை உருவாக்கும் அம்சத்தை whatsapp அறிமுகப்படுத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த டிஜிட்டல் அவதாரில் பலவிதமான ஹேர் ஸ்டைல், முகம் மற்றும் ஆடை உருவாக்கம் போன்ற அம்சங்கள் வழங்கப்படும். இதனைப் பயன்படுத்தி மேம்படுத்தப்பட்ட டிஜிட்டல் அவதாரங்களை உருவாக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |