Categories
தேசிய செய்திகள்

வாட்ஸ் அப்பில் தடுப்பூசி சான்றிதழ் பெறும் வசதி…. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு …..!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் முக்கிய பகுதியாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அதன் பலனாக பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருகிறது. அதனால் மக்களும் பெற்று நிம்மதி அடைந்துள்ளனர்.

இந்நிலையில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டதற்கான சான்றிதழை வாட்ஸ்அப்பில் இனி நொடிகளில் பெறலாம் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். அதன்படி  90131 51515 வாட்ஸ்அப் எண்ணில் covid certificate என அனுப்ப வேண்டும். சம்பந்தப்பட்ட நபர் ஒடிபி எண்ணை பதிவு செய்தவுடன் தடுப்பூசி சான்றிதழை நொடிகளில் பெறலாம் என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |