உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வருகின்றனர். அதனால் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு தினந்தோறும் புதுவிதமான அப்டேட்டுகள் வழங்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக வாட்ஸ் அப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் ஒரு முறை பார்த்து விட்டாலே மறைத்து விடும் மெசேஜ்களை வாட்ஸ் அப் அறிமுகப்படுத்த உள்ளது.
இந்த அப்ளிகேஷனில் பீட்டா வெர்சனில் இந்த வசதி அமிலுக்கு வந்திருக்கிறது. ஏற்கனவே போட்டோக்களை ஒருமுறை மட்டும் பார்க்கும் வகையில் பெறுநர்களுக்கு அனுப்பலாம். இந்த மெசேஜ்களை ஸ்க்ரீன் ஷாட் கூட எடுக்க முடியாது. தரவுகள் இல்லாமல் தகவல்களை பரிமாறிக் கொள்ள இந்த வசதி பயனுள்ளதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.