வாலிபரிடம் பண மோசடி செய்த மர்ம நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள முண்டியம்பாக்கம் கிராமத்தில் பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவரது வாட்ஸ்-ஆப் எண்ணில் தொடர்பு கொண்டு பேசிய மர்ம நபர் ஒருவர் தான் குன்னூர் என்டர்பிரைசஸ் நிறுவனத்திலிருந்து பேசுவதாகவும், முகக்கவசம் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை குறைந்த விலைக்கு தருவதாகவும் அதற்காக தனது வங்கி கணக்கிற்கு பணம் அனுப்புமாறும் கூறியுள்ளார். இதனை நம்பிய பிரகாஷ் அந்த மர்ம நபரின் வங்கி கணக்கிற்கு 14 லட்ச ரூபாய் பணத்தை அனுப்பி வைத்துள்ளனர்.
இந்நிலையில் அந்த மர்ம நபரிடம் இருந்து மருத்துவ உபகரணங்கள் எதுவும் வராததால் சந்தேகமடைந்த பிரகாஷ் சைபர் கிரைம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர். பணத்தை மோசடி செய்த மர்ம நபர் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.