உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வருகின்றனர். அதனால் தங்கள் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு மெட்டா நிறுவனம் திறந்து வரும் புதிய அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. சமீபத்தில் வாட்ஸ் அப் குரூப்பில் இணையும் உறுப்பினர்களின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக்கில் உள்ளது போல வாட்ஸ் அப்பிலும் எமோஜிகளை பயனர்கள் பயன்படுத்தலாம் என அறிவிக்கப்பட்டது. தற்போது பயனர்கள் தாங்களாகவே அவதார் உருவங்களை உருவாக்கிய அதனை பயன்படுத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் புதிய அப்டேட்டாக வாட்ஸ் அப்பை ஒரே நேரத்தில் இரண்டு டிவைஸ்களில் பயன்படுத்தும் அப்டேட் விரைவில் வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வணிகரீதியாக வாட்ஸ் அப்பை பயன்படுத்தும் பயனர்களுக்கு ஸ்டோரேஜ் என்பது ஒரு பெரும் பிரச்சனையாக இருக்கும். வாட்ஸ் அப்பில் இருந்து தினம்தோறும் புகைப்படங்கள்,ஆடியோக்கள் மற்றும் பிற கோப்புகள் போன்றவைகளால் ஸ்டோரேஜ் பிரச்சினை ஏற்படும். இதனை சரி செய்யும் விதமாக வாட்ஸ் அப்பில் எவ்வளவு ஸ்டோரேஜ் உள்ளது என்பதை சரி பார்த்து அதனை நீக்க முடியும்.
அதுமட்டுமல்லாமல் மொபைல் போன் ஸ்டோரேஜை சரி செய்து பலமுறை அனுப்பப்பட்ட ஆடியோ மற்றும் வீடியோக்கள் இருந்தால் அதனை நீங்கள் டெலிட் செய்து விடலாம். வாட்ஸ் அப்பில் உங்களுக்கு வந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை டெலிட் செய்த பிறகு அதை கேலரியில் இருக்கும். அதனால் கேலரியை நீங்கள் சரிபார்த்து டெலிட் செய்து விட வேண்டும். மேலும் வாட்ஸ் அப்பில் உங்களுக்கு வரும் ஆடியோ மற்றும் வீடியோக்கள் தானாக பதிவிறக்கம் ஆவதை கட்டுப்படுத்த வேண்டும். இதற்காக குறிப்பிட்டிலுள்ள ஆட்டோ டவுன்லோட் என்பதை ஆப் செய்து வைக்க வேண்டும்.