Categories
தேசிய செய்திகள்

வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் சேவை திடீர் முடக்கம்… பயனர்கள் அதிர்ச்சி..!!

உலகில் பிரபல தகவல் பரிமாற்ற சேவைகளான வாட்ஸ் அப் மற்றும் இன்ஸ்டாகிராம் அரை மணி நேரத்திற்கு மேலாக உலகம் முழுவதும் முடங்கியதால் அதன் பயனாளர்கள் தகவலை அனுப்பவும் முடியாமல் பெறமுடியாமல் சிரமத்திற்கு உள்ளானார்கள்.

உலகம் முழுவதும் அதிக பயனாளர்களை பயன்படுத்தப்படும் பேஸ்புக்குக்கு சொந்தமான தகவல் பரிமாற்ற செயலியான வாட்ஸ்ஆப் நேற்று இரவு 11 மணி அளவில் இந்தியா உள்ளிட்ட பல முக்கிய பகுதிகளில் முடங்கியதால் பயனாளர்கள் தகவலை அனுப்பவும் முடியாமல் பெறவும் முடியாமல் சிக்கலுக்கு உள்ளாகினர். மேலும் தடை ஏற்பட்டவுடன் பயனாளர்கள் ட்விட்டரில் ட்விட் செய்தனர். தங்களுக்கு வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை முற்றிலுமாக தடை  பட்டுள்ளதாகவும், எந்தவித செய்தி மற்றும் புகைப்படம் வீடியோக்களை பகிர முடியாது என டுவிட் செய்துள்ளனர்.

இதையடுத்து ட்விட்டரில் #whatsapp டவுன் என்ற ஹேஷ்டேக் சர்வதேச அளவில் டிரெண்ட் ஆனது. 45 நிமிடங்கள் நீடித்த இந்த குறைபாடானது பின்பு சரி செய்யப்பட்டது. ஆனாலும் ஏன் இந்த  இடையூறு ஏற்பட்டது என்பது குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. இதுகுறித்து வாட்ஸ்அப் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் கடந்த 45 வருடங்களாக பொறுமையுடன் காத்திருந்து மிக மிக நன்றி என்று பதிவிட்டுள்ளனர்.

Categories

Tech |