இன்றைய காலகட்டத்தில் பொதுமக்கள் தங்களுடைய சொந்த வாகனங்களில் பயணம் செய்வதை விட வாடகை வாகனங்களில் அதிகமாக பயணம் செய்ய விரும்புகிறார்கள். இதற்காக ஓலா, ஊபர் உள்ளிட்ட செயலிகள் அதிகம் உள்ள நிலையில் வாட்ஸப் மூலமாக எளிதாக புக்கிங் செய்து பயணம் செய்யும் வகையில் இந்தியாவிலேயே முதல் முறையாக ஊர் கேப்ஸ் எனும் புதிய பயண சேவை திட்டம் கோவையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான தொடக்க விழா கோவை லட்சுமி மில்ஸ் பகுதியில் உள்ள தனியார் ஓட்டல் ஒன்றில் நடைபெற்றது.
நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மரிய ஆண்டனி தலைமையில் இந்த தொடக்க விழா நடைபெற்றது. இந்தியாவிலேயே முதன்முறையாக வாட்ஸ் அப் மூலமாக புக்கிங் செய்யும் வகையில் இந்த பயண சேவை திட்டத்தை தொடங்கியுள்ளதாக ஊர் கெப்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் தெரிவித்துள்ளார். மேலும் முதற்கட்டமாக இந்த ஆட்டோ சேவையானது கோவையில் தொடங்கப்பட்டது. விரைவில் அனைத்து வாகனங்களையும் இணைத்து இந்தியா முழுவதும் இந்த சேவை திட்டம் தொடர உள்ளதாகவும் கூறியுள்ளார். இந்த whatsapp ஆட்டோ சேவையை பெறுவதற்கு 8098480980 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.