உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வருகின்றனர். அதே சமயம் வணிக ரீதியாகவும் whatsapp பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதனால் நாளுக்கு நாள் வாட்ஸ் அப் கணக்கு தொடங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் வாட்ஸ் அப் நிறுவனம் தனது பயனர்களுக்கு உதவும் விதமாக பல புதிய அப்டேட்டுகளை தினம்தோறும் வெளியிட்டுக் கொண்டே வருகிறது. அதன்படி அண்மையில் நீங்களே உங்களுக்கு மெசேஜ் செய்து கொள்ளும் அம்சம் கொண்டுவரப்பட்டது.
whatsapp மெசேஜ் யுவர் செல்ப் என்ற ஆப்ஷனை கிளிக் செய்து இந்த வசதியை பயனர்கள் பெற்றுக் கொள்ள முடியும். இதனைத் தொடர்ந்து whatsapp குரூப்புகளுக்கான அப்டேட்டுகளை வெளியிடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றது. அதன்படி வாட்ஸ் அப் குழுவில் சேரும் உறுப்பினர்களின் எண்ணிக்கை அண்மையில் உயர்த்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக தற்போது தேதி வாரியாக வாட்ஸ் அப் மெசேஜ்களை தேடும் அம்சமும் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த புதிய வசதி பீட்டா பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கும் எனவும் விரைவில் அனைவருக்கும் இந்த அம்சம் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.