Categories
பல்சுவை

வாட்ஸ் அப் பயனர்களுக்கு குட் நியூஸ்….. இனி அதிக நபர்களுடன் பேசலாம்…. வெளியான அப்டேட்….!!!!

சமூக வலைதளத்தில் பலராலும் அதிக விரும்பப்படும் வாட்ஸ் அப் தனது பயனர்களின் விருப்பங்களை நிறைவேற்றக்கூடிய வகையில் பல புதிய அப்டேட்களை அறிமுகம் செய்து வருகிறது. அதன்படி தற்போது குரூப் கால்லிங் வசதி அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் இனி பலர் ஒரே நேரத்தில் குரூப் காலில் இணையலாம். இந்த வசதி விரைவில் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் whatsapp நிறுவனம் வெளியிட உள்ளது. இந்த வசதி உங்கள் ஃபோனில் உள்ளதா என்பதை அறிய நேரடியாக whatsapp சென்று அதில் Calls டேபைதிறக்கவும். அதன் மேலே Creat Call Link என்று இருந்தால் உங்கள் ஃபோனில் அந்த வசதி உள்ளது. நீங்கள் இந்த வசிதியின் மூலம் வீடியோ அல்லது ஆடியோ கால்லிங் ஒன்றை உருவாக்கி பலருக்கு பகிர்ந்து அவர்களுடன் பேச முடியும்.

இதனை whatsapp, Copy Link, share link போன்ற வகைகளில் அடுத்தவருக்கு பகிர முடியும். இந்த லிங்கை மற்றவர்கள் கிளிக் செய்தால் அதில் join அல்லது leave என இரண்டு ஆப்ஷன்கள் இருக்கும். அதன் மூலம் காலில் சேரவும் விடைபெறும் முடியும். இந்த வசதி பார்ப்பதற்கு Zoom மற்றும் Google Meeting ஆகிவற்றில் இருப்பது போலவே உள்ளது. இருப்பினும் இந்த இரு செயலிகளில் வாட்ஸ் அப் செயலியை விட அதிக வசதிகள் உள்ளது. தற்போது வாட்ஸ் அப்பில் இந்த புதிய வசதி உடன் வெளியாகியுள்ளதால் விரைவில் இது மேம்பட்டு இதனைப் போல பல புதிய வசதிகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் வாட்ஸ் அப் மூலம் 32 பேர்கள் கொண்ட குரூப் கால் பேச முடியும். ஆனால் விரைவில் இது அதிகரிக்கப்பட்டு 1024 பேர்கள் கலந்து கொள்ளும் வகையில் மேம்பாட்டும் என்று கூறப்படுகிறது. அதன் பிறகு இந்த Call Link பயனர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக மாறும்.

Categories

Tech |