Categories
Tech

வாட்ஸ் அப் பயனர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. வீடியோ காலில் வரப்போகும் புதிய அம்சம்…. சூப்பர் அப்டேட்…..!!!!

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இதில் பயணர்களின் வசதிக்கு ஏற்ப தினந்தோறும் புதுப்புது அப்டேட்டுகள் கொண்டுவரப்பட்டு வருகிறது. அதனால் நாளுக்கு நாள் வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இந்நிலையில் வாட்ஸ் அப்பில் புதிதாக ஒரு அம்சம் வர உள்ளது. அதாவது whatsapp செயலியில் வீடியோ அழைப்பை மேற்கொள்ளும் போது பிற பயன்பாடுகளை பயன்படுத்தும் வகையில் புதிய அம்சம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது தற்போது சில பயனாளிகளுக்கு மட்டுமே கொண்டு வந்துள்ள நிலையில் விரைவில் அனைவருக்கும் கொண்டுவரப்பட உள்ளது. தற்போது ஐஓஎஸ் 22.24.0.79 வைத்துள்ளவர்கள் இந்த புதிய அம்சத்தை பயன்படுத்தலாம்.

Categories

Tech |