Categories
Tech

வாட்ஸ் அப் பயனர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. இனி குரூப் சாட் ரொம்ப ஈஸி…. வந்தது அசத்தல் அப்டேட்….!!!!

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வருகின்றனர். தங்கள் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு தினந்தோறும் புதுவித அப்டேட்டுகளை வாட்ஸ் அப் நிறுவனம் வழங்கி வருகிறது. அதனால் வாட்ஸ் அப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே இருக்கிறது. சமீபத்தில் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் குறித்து புகார் அளிக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் விதிகளை யாராவது மீறினால் அது தொடர்பாக சக பயனர்களை புகார் தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

இந்த புதிய அம்சம் தற்போது டெக்ஸ்டாப் பீட்டா வெர்ஷனில் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.படிப்படியாக அனைவருக்கும் அதாவது ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் பயனர்களுக்கு வழங்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. இதனைத் தொடர்ந்து தற்போது வாட்ஸ் அப்பில் குரூப் சாட்டில் செலக்ட் சாட் என்ற விருப்பம் ஒன்று கொண்டுவரப்பட்டுள்ளது. அதன் மூலமாக வாட்ஸாப் குரூப்பில் நீங்கள் ஏதேனும் ஒருவரின் சாட்டை தேர்ந்தெடுத்து அதனை பிளாக் செய்ய முடியும். மேலும் அதனை பார்க்காதவாறு குறிப்பிடவும் முடியும். இந்த புதிய அம்சம் வருகின்ற 2023 ஆம் ஆண்டு நடைமுறைக்கு வரும் என தகவல் வெளியாகி உள்ளது

Categories

Tech |