உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் வாட்ஸ் அப்பை பயன்படுத்தி வருகிறார்கள். இது தகவல் தொடர்புக்காக மக்களால் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. இந்த நிலையில் பழைய ஐபோன் மாடல்களில் வரும் அக்டோபர் 24ஆம் தேதி முதல் whatsapp இயங்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது வாட்ஸ் அப்பின் சமீபத்திய அப்டேட்டினால் வருகிற அக்டோபர் 24 முதல் iOS 10, iOs 11 ஆகிய மென்பொருள் தளங்களில் வாட்ஸ் அப் இயங்காது. இந்த மென்பொருள் பதிப்புகள் ஐபோன்களில் பரவலாக பயன்படுத்தப்படவில்லை.
இருப்பினும் ஐபோன் 5 மற்றும் ஐபோன் 5 சி ஆகிய மாடல்களில் இந்த மென்பொருள் பயன்படுத்தப்பட்டுள்ளதால் இந்த இரண்டு மாடல்களை பயன்படுத்துவர்கள் தங்களுடைய மென்பொருளை அப்டேட் செய்ய வேண்டும். அவர்களின் ஐபோன்கள் புதுப்பிக்கப்பட வேண்டும். ஐபோன் பயனர்கள் IOs 12, அல்லது அதற்கு அடுத்த மென்பொருளை அப்டேட் செய்திருக்க வேண்டும். அதுபோல ஆண்ட்ராய்டு பயனர்கள் ஆண்ட்ராய்டு 4.1 அல்லது அதற்கு பிந்தைய பதிப்பை கொண்டிருக்க வேண்டும்.