இன்றைய காலகட்டத்தில் அனைவரும் ஆண்ட்ராய்டு மொபைல் போன் பயன்படுத்த தொடங்கிவிட்டன. அதனால் மக்களின் பயன்பாடுக்கு ஏற்றவாறு தகவல் தொழில்நுட்பமும் நாளுக்கு நாள் வளர்ச்சி அடைந்து கொண்டே வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க மறு பக்கம் மோசடி சம்பவங்களும் நடந்து கொண்டிருக்கின்றன. அதாவது பயனர்களின் தனிப்பட்ட விவரங்கள் அனைத்தும் மிக எளிமையாக திருடப்படுகிறது. இதனிடையே இணைய பாதுகாப்பு நிறுவனமான ESET எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த அறிவிப்பில் ஜிபி வாட்ஸ்அப் எனப்படும் வாட்ஸ் அப்பின் பிரபலமான ஆனால் குளோன் செய்யப்பட்ட மூன்றாம் தரப்பு பதிப்பு மூலமாக கடந்த சில மாதங்களில் அதிகமான ஆண்ட்ராய்டு ஸ்பை வேர் கண்டறியப்பட்டுள்ளது.இந்த செயலி மூலமாக பயனர்களின் ஆடியோ மற்றும் வீடியோக்களை பதிவு செய்ய முடியும்.இது தொடர்பான பல செயலிகள் கூகுள் பிளே ஸ்டோரில் இருக்காது.இந்த செயலியின் மூலமாக அதிகம் பாதுகாக்கப்பட்ட நாடாக ரஷ்யா உள்ளது.
மேலும் இந்த செயலி மூலமாக பயணர்களின் தரவுகள் திருடப்படும் எனவும் ஒரு நாட்டையே வேம்பு பார்க்க இதுபோல செய்திகள் பயன்படுத்தப்படுவதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியிடப்பட்டுள்ளது. எனவே பயனர்களின் whatsapp சேட்டுகளை உலவு பார்க்க பல போலீஸ் செயலிகள் இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் தேவையற்ற செயலிகளை எதற்காகவும் போனில் இன்ஸ்டால் செய்ய வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.