Categories
மாநில செய்திகள்

வாட்ஸ் அப் பயனர்கள் கவனத்திற்கு… குரூப் சாட்டில் புதிதாக வரவிருக்கும் அப்டேட்… வெளியான அறிவிப்பு….!!!!!!!

 

மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான whatsapp நிறுவனம் அடுத்தடுத்து அப்டேட்களை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றது. அதிலும் குறிப்பாக whatsapp பயனர்களின் விவரங்கள் மற்றும் ரகசியங்களை பாதுகாப்பதில் கவனம் செலுத்தி வருகின்றது. இதனால் உலகம் முழுவதும் பில்லியன் கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வருகின்றார்கள். மேலும் பயனர்களின் விருப்பத்தை புரிந்து கொண்டு பல அம்சங்களுடன் கூடிய அப்டேட் அடுத்தடுத்து வெளியாகி கொண்டே இருக்கின்றது. கடந்த மூன்று வாரங்களாகவே பல அப்டேட் வெளிவந்துவிட்டது.

அதாவது பயனர் ஒருவர் ஆன்லைனில் இருப்பதை யார் யாரெல்லாம் பார்க்க வேண்டும் என்பதை முடிவு செய்து கொள்ளலாம். மேலும் வாட்சப் குரூப்பில் அனுப்பப்படும் தேவையில்லாத கருத்துக்களை அட்மின் நீக்கி கொள்ளலாம். அதுமட்டுமல்லாமல் குரூப்பில் யாருக்கும் தெரியாமல் விலகிக் கொள்ளும்படியான அப்டேட்டும் வெளியாக இருக்கின்றது. இது மட்டுமல்லாமல் snapchat போலவே அவதார் உருவங்களை உருவாக்கிக் கொள்ளும்படியான அப்டேட்டுகளும் வர இருக்கின்றது. அதேபோல டெலிட் ஃபார் எவ்ரி ஒன் செய்து விட்டால் எந்த செய்தியை டெலிட் பார் எவரி ஒன் செய்திருக்கிறாரா அந்த செய்தியை சில வினாடிக்குள் தெரிந்து கொள்ளும்படியான அப்டேட்டும் மிக விரைவில் வர இருக்கிறது. அதே போல வாட்ஸ் அப் குருப்பில் ஒருவர் டெலிட் பார் எவ்ரி ஒன் செய்து விட்டால் குரூப் அட்மின் அந்த செய்தியை பார்க்கும் படியான அப்டேட் இன்னும் சில வாரங்களில் வர இருப்பதாக கூறப்பட்டுள்ளது. பயனர்களும் அடுத்தடுத்து அப்டேட்களை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

Categories

Tech |