Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

வாட்ஸ் அப் மூலம் புகார் அளிக்கலாம்…. நகராட்சி நிர்வாகத்தின் அதிரடி அறிவிப்பு…!!

வாட்ஸ்அப் மூலம் புகார்களை தெரிவிக்கலாம் என நகராட்சி நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர்.

திருப்பத்தூர் நகராட்சியில் 36 வார்டுகள் இருக்கிறது. இங்கு குடிநீர் வினியோகம், பொது சுகாதாரம், மழை நீர் தேங்கியுள்ள இடங்கள், தெருவிளக்கு போன்ற அடிப்படை வசதிகள் குறைபாடுகள் ஏற்படுகிறது. இதுகுறித்து பொதுமக்கள் வாட்ஸ் அப் மூலம் புகார் அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி 7397392682 (நகராட்சி பொறுப்பாளர்), 7397392681 (ஆணையாளர்), 9380403604 (துப்புரவு அலுவலர்) ஆகியோரின் செல்போன் வாட்ஸ்அப் எண்ணில் புகார்களை அனுப்பலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |