Categories
தேசிய செய்திகள்

வாட்ஸ் அப் மூலம் வீடு தேடி வரும் வங்கி சேவை – SBI யின் புதிய திட்டம்..!!

வாட்ஸப் மூலமாக வங்கி சேவை அனைத்தும் வீட்டிற்கே  வருமென SBI அறிமுகம் செய்தது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வாட்ஸ்அப் மூலம்  வங்கி சேவைகள் அனைத்தும்  வீட்டிற்கு வருகிறது என்ற செய்தியானது வங்கி வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது.கொரோனா காலகட்டத்தில்  இணைய தளத்தை நோக்கி  அனைத்து செயல்களும்நடைபெறுகின்றன. குறிப்பாக வங்கி சேவைகள் வீட்டிலிருந்தவாறே  அனைத்து செயல்களும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதிலும் கூடுதலாக வலுச்சேர்க்கும் வகையில் வங்கியும் பல்வேறு தொழில்நுட்ப  மாற்றங்களை வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. 

Maharashtra: Miscreants flee with ATM machine containing around Rs ...

அவ்வகையில் தற்போது ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI) ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.  வாடிக்கையாளர்கள் வாட்ஸ்அப் செய்தியின் மூலமாக வங்கிக்கு கோரிக்கை விடுக்கும் பட்சத்தில் அந்த வாடிக்கையாளரின் வீட்டு வாசலுக்கே ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் ஏடிஎம் வருமென்று கூறப்பட்டுள்ளது. முதல் கட்டமாக இத்திட்டமானது  லக்னோவில் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலமாக 44 கோடி வாடிக்கையாளர்கள் பயன்பெறுவார்கள் என்று கூறப்படுகிறது. இச்செயல் முறையின் மூலம் நாம் நமது பணத்தை பெறுவதற்கு ஏடிஎம் செல்ல வேண்டியதில்லை என்பதால் நமது வீட்டிற்கு ஏடிஎம் இயந்திரம் வருமென்று எதிர்பார்க்க பட்டது மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

https://twitter.com/AjayKhannaSBI/status/1295397055104348172

Categories

Tech |