Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“வாட்ஸ் அப் வீடியோ காலில் மாணவிக்கு பாலியல் தொல்லை”… மாணவர் கைது…!!!!!

சென்னை திருவெற்றியூர் அம்பேத்கர் நகரை சேர்ந்த அனிதா என்பவர் வசித்து வருகிறார். இவர் பாரிமுனையில் உள்ள தனியார் மகளிர் கலை கல்லூரியில் இரண்டாம் ஆண்டு வரலாறு படித்து வருகிறார். இந்நிலையில்  அனிதா கல்லூரிக்கு பேருந்தில் செல்லும்போது அதே பேருந்தில் பயணிக்கும் ஆர்.கே நகர் அரசு கலைக்கல்லூரியை சேர்ந்த  மாணவன்  பரத் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர்களின் நட்பு வளர்ந்த நிலையில் இருவரும் தங்களது செல்போன் எண்களை பரிமாறிக் கொண்டு whatsapp சேட்டிங் மற்றும் வீடியோகால்  வழியாக பேசி வந்துள்ளனர்.

கடந்த 15-ஆம் தேதி இரவு மாணவியும், கல்லூரி மாணவன் பரத்தும் வீடியோ காலில் பேசிக் கொண்டிருந்தபோது மாணவன் திடீரென அந்த மாணவியின் ஆடையை கழற்றுமாறு கூறி வற்புறுத்தியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி அவரது போன் இணைப்பை துண்டித்து விட்டு இந்த சம்பவம் குறித்து பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனையடுத்து பெற்றோர் மற்றும் மாணவி திருவொற்றியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிந்த போலீசார் பரத்தை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

Categories

Tech |