தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் செல்போன் பயன் படுத்தி வருகிறார்கள். தங்களின் அன்றாட வாழ்க்கையில் செல்போன் என்பது ஒரு இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. அவ்வாறு செல்போன் பயன்படுத்தும் பயனாளர்கள் அனைவரும் தங்கள் தேவைக்கு ஏற்றவாறு பல்வேறு செயலிகளை பயன்படுத்தி வருகின்றனர். அதிலும் குறிப்பாக வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகள் அதிக அளவு பயன்படுத்தப்படுகின்றன. அதில் வாட்ஸ் அப் செயலி அனைத்து விதமான உரையாடல்களும் பயன்படுத்தப்படுகிறது.
இந்நிலையில் வாட்ஸ்அப் disappearing message என்ற புதிய வசதியை வழங்க உள்ளது. அதன் மூலம் ஒருவருக்கு அனுப்பப்படும் அல்லது பெறப்படும் செய்தி ஏழு நாட்களில் மறைந்து போகும். இதில் 24 மணி நேரத்தில் மறைந்து போகும் பகலிலும் வசதியை வழங்க உள்ளது. செய்தி தேவைப்படும் பட்சத்தில் முன்கூட்டியே ஸ்க்ரீன் ஷாட் எடுத்து வைத்துக் கொள்ளலாம்.