பெட்ரோல் டீசல் மீதான வாட் வரியை குறைக்க வலியுறுத்தி பாஜகவினர் மாட்டுவண்டியுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பா.ஜ.க. விவசாய அணி, ஒ.பி.சி.அணி மற்றும் அமைப்பு சாரா பிரிவு சார்பில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும், அதன் மீதான வாட் வரியை குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இதற்கு மாவட்ட விவசாய அணி மாவட்ட தலைவர் அசோக்குமார் தலைமை தாங்கியுள்ளார்.
இதனையடுத்து ஒ.பி.சி. அணி மாவட்ட தலைவர் மாதேஸ்வரன், மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி, துணைத்தலைவர் ரஞ்சித்குமார், விவசாய அணியின் மாநில துணை தலைவர் சுரேந்திரரெட்டி, அமைப்புசாரா பிரிவு மாநில செயலாளர் மணிவண்ணன், இளைஞரணி மாநில பொதுசெயலாளர் ராஜேஷ்குமார், தேசிய பொதுக்குழு உறுப்பினர் மனோகர் உள்பட கட்சி நிர்வாகிகள் பலரும் பங்கேற்றுள்ளனர். மேலும் பாஜகவினர் மாட்டு வண்டியை அருகில் நிறுத்தி பெட்ரோல் விலையை குறைக்க வலியுறுத்தி நுதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.