Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

வாணியம்பாடியில் வாக்கு எண்ணும் மையத்தில் தி.மு.க. பிரமுகர்கள் தகராறு…!!!

வாணியம்பாடியில் வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த உதவி பெண் காவல் ஆய்வாளரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக திமுக பிரமுகர் 2 பேர் மீது 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் சின்னவேப்பம்பட்டில் உள்ள தனியார் மகளிர் கல்லூரியில் திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூர் ஆகிய 4 சட்டமன்ற தொகுதியில் பதிவான வாக்கு இயந்திர பெட்டிகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இதற்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ள நிலையில் அரசியல் கட்சி பிரமுகர்கள் வாக்கு எண்ணும் மையத்தை கண்காணிக்க சுழற்சி முறையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் காவல் பெண் உதவி ஆய்வாளர் ராணி என்பவர் பணியில் ஈடுபட்டிருந்தபோது அங்கு வந்த திமுக பிரமுகர்களிடம் வாக்கு எண்ணும் மையத்தில் பார்வையிடுவதற்கான அடையாள அட்டையை காண்பிக்க வேண்டும் என பெண் காவல் உதவியாளர் வலியுறுத்தியுள்ளார்.

அதற்கு அந்த திமுக பிரமுகர்கள் பெண் காவல் உதவி ஆய்வாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், இன்னும் 2 நாளில் வேறு ஒரு இடத்திற்கு மாற்றி விடுவேன் என்று மிரட்டியும், அவதூறாகப் பேசியும் அராஜகத்தில் ஈடுபட்டனர். அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக பெண் காவல் உதவி ஆய்வாளர் ராணி கொடுத்த புகாரின் பேரில் ஆளுங்காயம் திமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் அசோகன் மற்றும் திருப்பத்தூரை சேர்ந்த தண்டபாணி என்பவர் மீது வாணியம்பாடி காவல் நிலையத்தில் 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |