Categories
சினிமா தமிழ் சினிமா

வாணி போஜனுடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை… வெளியான கலக்கல் புகைப்படம்…!!!

நடிகை வாணி போஜனுடன் பாண்டியன் ஸ்டோர் சீரியல் நடிகை காவியா எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அண்ணன் தம்பி பாசம், கூட்டுக்குடும்ப வாழ்க்கையை மையப்படுத்தி இந்த சீரியலின் கதை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சீரியல் தொடர்ந்து டி.ஆர்.பி யில் முன்னிலையில் இருந்து வருகிறது. இந்த சீரியலில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகளுக்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

தற்போது இந்த சீரியல் புது திருப்பங்களுடன் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வரும் காவ்யா பிரபல நடிகை வாணி போஜனுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. நடிகை வாணி போஜன் சினிமாவுக்கு வருவதற்கு முன் சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வமகள் சீரியலில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |