Categories
சினிமா தமிழ் சினிமா

வாணி போஜன் நடிக்கும் புதிய வெப்சீரிஸ்…. படப்பிடிப்பு ஆரம்பம்…. !!!!

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்று தற்போது கதாநாயகியாக தொடர்ச்சியாக பல திரைப்படங்களில் நடித்து வருகிறார் வாணிபோஜன். அருண் இயக்கத்தில் பிக்பாஸ் கவின் கதாநாயகனாக நடிக்கும் ஊர்க்குருவி படத்திலும் கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் வெப்சீரிஸ் நடித்து வரும் வாணி போஜன் கடைசியாக ஜெய்யுடன் இணைந்து ட்ரிபிள்ஸ் வெப் சீரிஸில் நடித்திருந்தார். தொடர்ந்து இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் ஏவிஎம் தயாரிப்பில் அருண் விஜய் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்திலும் நடிக்கவிருக்கிறார். அதன்படி வாணி போஜன் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

அதன்பின்னர் சுந்தரபாண்டியன் பட இயக்குனர் எஸ்ஆர் பிரபாகரன் இயக்கும் இந்த புதிய வெப்சைட் இதில் நடிகர் கலையரசன் மற்றும் வாணிபோஜன் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். நடிகை விஜய் சந்திரசேகர், நடிகர் அர்ஜுன் மற்றும் லகுபரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு வெற்றிவேல் மகேந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். அபி அண்ட் அபி என்டர்டெயின்மென்ட் சார்பில் இளங்கோவன் தயாரிக்கும் இந்த புதிய வெப் சீரிஸில் நேரடியாக ZEE5, OTT, தளத்தில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த வெப்சீரிஸ் குறித்த அடுத்தடுத்து அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |