தற்போதைய காலகட்டத்தில் ஒரு சின்ன தலைவலி என்றால் கூட அனைவரும் மாத்திரையை தான் தேடுகிறார்கள். ஆனால் நம் முன்னோர்கள் காலத்தில் இயற்கை மருத்துவங்கள் அனைத்து நோய்களுக்கும் உதவின. அதனை நாம் அனைவரும் இப்போது மறந்துவிட்டோம். அவ்வாறு உடலிலுள்ள பல பிரச்சனைகளுக்கு இயற்கை மருத்துவமே மிக சிறந்தது.
அதன்படி மாவிலங்கப்பட்டை, சுக்கு, கடுக்காய் தோல், சீந்தில் கொடி ஆகியவற்றை இடித்து, அதன் எடைக்கு கால்பங்கு அளவாக மாவிலங்கு பூ, மாவிலங்க இலைகளை ஒன்றாக சேர்த்து 5 கிராம் அளவு எடுத்து கால் லிட்டர் நீரில் கலந்து நன்கு கொதிக்க வைத்து, வடிகட்டி பருகி வர வாதம் சம்பந்தப்பட்ட நோய்கள் கட்டுக்குள் வரும். கேன்சர், குடற்புண்களை சரி செய்வது, பல் சுத்தம் போன்றவற்றில் வேப்பம்பூ நல்ல மருந்தாக பயன்படுகிறது.