வாதம் நம் உடலின் இயக்கத்தை, தசை, மூட்டுக்கள், எலும்பு இவற்றின் பணியை, சீரான சுவாசத்தை, சரியான மலம் கழிப்பதை எல்லாம் சரியாக பார்த்துக்கொள்ளும். மூட்டுவலி கழுத்துவலி உள்ளதென்றால் வாதம் சீர் கெட்டு உள்ளது என்று பொருள். எனவே இதற்கு நாம் இயற்கையாகவே கிடைக்கும் பொருட்களை பயன்படுத்தி சரி செய்யலாம்.
இதற்காக ஆங்கில மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. இயற்கை மருந்துகளான இலவங்கப்பட்டை , புதினா, பூண்டு, சீரகம், முடக்கத்தான் கீரை உணவில் சேர்த்து வந்தால் வாதத்தை குறைத்திட முடியும்.