Categories
சினிமா தமிழ் சினிமா

‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு செம ஆட்டம் போட்ட பிரபல வீஜே… வெளியான கலக்கல் வீடியோ… இணையத்தில் வைரல்…!!!

பிரபல தொகுப்பாளினி அஞ்சனா வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடிய வீடியோ வெளியாகியுள்ளது.

சன் மியூசிக் தொலைக்காட்சியில் பல வருடங்களாக தொகுப்பாளினியாக பணிபுரிந்து ஏராளமான ரசிகர்கள் மனதை கவர்ந்தவர் அஞ்சனா . இதை தொடர்ந்து இவர் புதுயுகம், ஜீ தமிழ் உள்ளிட்ட தொலைக்காட்சிகளில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார். மேலும் இவர் பட விழாக்கள் மற்றும் இசை வெளியீட்டு விழாக்களையும் தொகுத்து வழங்கியுள்ளார் .

https://twitter.com/AnjanaVJ/status/1376540793742106631

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அஞ்சனா அவ்வப்போது தனது அழகிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ஆகியவற்றை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்நிலையில் ‘மாஸ்டர்’ படத்தில் இடம்பெற்ற ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு அசத்தலாக நடனமாடிய வீடியோவை அஞ்சனா தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவுக்கு ஏராளமான லைக்குகள் குவிந்துள்ளது .

Categories

Tech |