இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் விளையாட்டு மைதானத்தில் வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனம் ஆடிய வீடியோ வைரலாகி வருகிறது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி இன்று நடந்தது. அப்போது விளையாடிக் கொண்டிருந்த சமயத்தில் மைதானத்தில் வாத்தி கம்மிங் பாடல் ஒலிபரப்பானது. அந்தப் பாடலுக்கு அஸ்வின் நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ரவிசந்திரன் அஸ்வின், அக்சர் படேல் ஆகியோரின் சுழற்பந்துவீச்சாளர் 2வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 117 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
இரண்டாவது டெஸ்ட் போட்டி 4-வது நாளிலேயே இந்திய அணிக்கு அபாரமான வெற்றி கிடைத்துள்ளது. இந்நிலையில் விளையாடிக்கொண்டிருந்த போது மைதானத்தில் மாஸ்டர் திரைப்படத்தின் வாத்தி கம்மிங் பாடல் ஒளிபரப்பு செய்யப்பட்டது. அப்போது அஸ்வின் தன்னை மறந்து நடனமாடினார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
Ashwin doing the #VaathiComing shoulder drop at the Chepauk! Happy ending to a proper cricket festival in Chennai! 🤩🤩🤩🔥🔥🔥🔥 #INDvENG #Master pic.twitter.com/VEUQnEBoDL
— Srini Mama (@SriniMaama16) February 16, 2021