சார்பட்டா பரம்பரை படத்தில் டான்ஸிங் ரோஸ் கதாபாத்திரத்தில் நடித்த ஷபீர் ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு நடனமாடிய வீடியோ வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்த இந்த படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். மேலும் அனிருத் இசையில் வெளியான இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது.
https://twitter.com/PrimeVideoIN/status/1427277349582565380
அதிலும் குறிப்பாக வாத்தி கம்மிங் பாடல் பட்டி தொட்டியெங்கும் பட்டைய கிளப்பியது. இந்த பாடலுக்கு பிரபலங்கள் பலரும் நடனமாடிய வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வந்தது. இந்நிலையில் சார்பட்டா பரம்பரை படத்தில் டான்ஸிங் ரோஸ் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமடைந்த ஷபீர் வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடிய வீடியோ வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.