மாஸ்டர் படத்தில் இடம்பெற்ற வாத்தி கம்மிங் பாடல் யூடியூபில் 250 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்த இந்த படத்தில் மாளவிகா மோகனன், விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், சாந்தனு, கௌரி கிஷன், ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். மேலும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். இந்த படத்தில் இடம் பெற்ற பாடல்கள் அனைத்தும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதிலும் குறிப்பாக ‘வாத்தி கம்மிங்’ பாடல் பட்டிதொட்டியெங்கும் பட்டைய கிளப்பியது.
ENTERING THE GRANDIOSE 2️⃣5️⃣0️⃣ MILLION CLUB! 😎
நம்ம #VaathiComing smashing records 🔥➡️ https://t.co/QnYnpKwIax@actorvijay @Dir_Lokesh @anirudhofficial @XBFilmCreators @7screenstudio @Jagadishbliss #Master #VaathiComingHits250MViews pic.twitter.com/ljCzzzJJ2g
— Sony Music South (@SonyMusicSouth) August 28, 2021
குழந்தைகள், பெரியவர்கள், திரையுலக பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள், வெளிநாட்டினர் என பலரும் இந்த பாடலுக்கு நடனமாடிய வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வந்தது. இந்நிலையில் வாத்தி கம்மிங் பாடல் வீடியோ யூடியூபில் 250 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து புதிய சாதனை படைத்துள்ளது. இதனை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.