நடிகர் தனுஷ் தெலுங்கு பட உலகில் தனது பயணத்தை தொடங்கி உள்ளார்.
தனுஷின் இரண்டாவது pan-india படமான வாத்தி படத்தின் படப்பிடிப்பு நேற்று தொடங்கியது
இதில் நடிகை சம்யுக்தா மேனன் மற்றும் இயக்குனர் வெங்கி அட்லூரி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் படமாக்கப்படுகிறது. தெலுங்கில் இந்த படத்திற்கு சார் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் மூலம் தனுஷ் தெலுங்கு பட உலகிலும் கால் பதிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.