Categories
அரசியல் மாநில செய்திகள்

வானதிக்கு நேர்ந்த அவமானம்… உடனே அழைத்த ஸ்டாலின்… கோவையில் நடந்த நிகழ்வு…!!!

கோவையில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற வானதி சீனிவாசன் மேடைக்கு அழைத்து அமர வைத்தார் முதல்வர் முக ஸ்டாலின்.

முதல்வர் முக ஸ்டாலின் நேற்று முன்தினம் கோயம்புத்தூர் வஉசி மைதானத்தில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்துகொண்டு பல்வேறு நலத்திட்டங்களை திறந்து வைத்தார். அது மட்டும் இல்லாமல் பல்வேறு புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். இந்த விழாவில் பங்கேற்ற கோவை மாவட்டத்தை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கு முன் வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. கோவை மாவட்டத்தை பொறுத்த மட்டில் திமுகவுக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை. அதிமுகவும் பாஜக எம்எல்ஏவுக்கு மட்டுமே வெற்றி பெற்றனர்.

வானதி ஸ்ரீனிவாசன் தனக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் அமர்ந்து இருந்தார். பின்னர் அவரை முதல்வர் முக ஸ்டாலின் மேடைக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது: “இதை நான் அரசு விழாவாக பார்க்கிறேன். முதல்வர் வாக்குறுதி கொடுத்த திட்டங்களை நிறைவேற்ற வந்துள்ளார். நான் இந்த தொகுதி மக்களின் பிரதிநிதி, இருந்தாலும் எனக்கு அழைப்பு விடுக்கவில்லை. மாவட்ட மக்கள் தொடர்பு அதிகாரி மூலம் என்னை தொடர்பு கொண்டு அழைப்பு விடுத்தார்கள். அது எனக்கு அவமானமாக இருந்தாலும், என் தனிப்பட்ட கருத்துக்களை மனதில் கொள்ளாமல், மக்களின் நலனை முக்கியமாக கொண்டு இந்த கூட்டத்தில் கலந்து கொண்டேன்.

அது மட்டுமில்லாமல் எனக்கு மேடையில் இருக்கை ஒதுக்கப்படவில்லை. இதனால் கீழே இருக்கையில் அமர்ந்திருந்தேன். இதை பார்த்த முதல்வர் முக ஸ்டாலின் என்னை மேடையில் அழைத்து அமர வைத்தார். இது என் தொகுதி மக்களுக்கு கிடைத்த மரியாதையாக தான் நான் பார்க்கிறேன். எனக்கு கிடைத்த தனிப்பட்ட மரியாதையாக நான் பார்க்கவில்லை. தொடர்ந்து முதல்வர் வழங்கும் மக்கள் நலத்திட்டங்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்து, இன்னும் மேம்படுத்துவேன்” என்று அவர் தெரிவித்தார்.

Categories

Tech |