Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“வானத்தில் இருந்து விழுந்த அதிசய பச்சை நிறக்கல்”… 10 லட்சத்திற்கு விற்க முயன்ற 8 பேரை கைது செய்த போலீஸார்…!!!

வானத்தில் இருந்து விழுந்த அதிசய பச்சை நிறக்கல் எனக்கூறி விற்பனை செய்ய முயன்ற கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள டி.என்.பாளையத்திற்கு அருகே இருக்கும் நஞ்சை புளியம்பட்டி தெருவில் வாழ்ந்து வருபவர் ராஜேந்திரன். அவரிடம் ஆனந்தகுமார், சின்ராஜ் ஆகிய 2 பேரும் தங்களிடம் வானத்தில் இருந்து விழுந்த அதிசய பச்சை கல் இருப்பதாகவும் கல்லை வைத்து இருந்தால் கத்தியால் வெட்டினாலும் ரத்தம் வராது, காயம் எதுவும் ஏற்படாது என கட்டுக் கதைகளை கூறி ஆசை வார்த்தைகளை பேசி இருக்கின்றனர்.

இதை உண்மை என நம்பி இராஜேந்திரன் இந்தக் கல்லை பார்க்க வேண்டுமென ஆனந்தகுமார் இடம் கூறியதையடுத்து அந்த கல்லை பார்க்க வேண்டுமென்றால் டி.என்.பாளையத்திற்கு வரவேண்டும் என ஆனந்தகுமார், சின்ராஜ் உள்ளிட்டோர் கூறியிருக்கின்றனர். இதையடுத்து ராஜேந்திரனும் அவரின் நண்பர் செந்தில்குமார் அந்த இடத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்று உள்ளனர். அந்த இடத்தில் 8 பேர் கொண்ட கும்பல் நின்றுகொண்டிருந்தது. அந்த கும்பலானது ராஜேந்திரனிடம் இந்த கல்லை காட்டுவதாகவும் அதனுடைய விலை 10 லட்சம் என கூறியிருக்கின்றனர். அப்போது அவர்களின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த ராஜேந்திரனும் செந்தில்குமாரும் அதை வாங்காமல் அங்கிருந்து திரும்பி வந்துள்ளனர்.

மேலும் கல்லை வாங்காவிட்டால் இருவரையும் கொலை செய்துவிடுவதாக கொலை மிரட்டல் விடுத்திருந்ததால் ராஜேந்திரன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் ஆனந்தகுமார், சின்ராஜ், ஆந்திர மாநிலத்தில் உள்ள நாகூர் ஐயா, பவானி அருகே உள்ள தொட்டிபாளையத்தைச் சேர்ந்த சிவன்மலை, சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே இருக்கும் சாமிமலை, சடையம்பாளையத்தைச் சேர்ந்த பழனிச்சாமி, டிஎன்.பாளையத்தை சேர்ந்த ஆரோக்கியதாஸ், அந்தியூர் பகுதியைச் சேர்ந்த சின்ராஜ் உள்ளிட்ட 8 பேரை போலீசார் கைது செய்தார்கள்.

Categories

Tech |