நாம் விமானத்தில் வானத்தில் பறந்து கொண்டிருக்கும் போது திடீரென விமானத்தின் கதவை திறந்தால் என்ன ஆகும் என யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா? அது பற்றி ஒரு சுவாரசியமான தொகுப்பை இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். பொதுவாக விமானம் 30,000 அடியில் இருந்து 43,000 அடிக்குள் பறக்கும். இதனையடுத்து விமானம் வானத்தில் மிக வேகமாக பறந்து கொண்டிருக்கும் போது திடீரென கதவு திறந்து விட்டால் ஒரு புயல் வந்தது போல் விமானத்தில் இருக்கும் அனைவரும் பறந்து கீழே வந்து விடுவார்கள். அதன்பிறகு அதிக காற்று விமானத்திற்குள் வருவதால் விமானியால் விமானத்தை கட்டுப்படுத்த முடியாமல் கீழே விழுந்து விபத்துக்குள்ளாகி விடும்.
ஆனால் இப்படி நடப்பதற்கு பெரும்பாலும் வாய்ப்பே கிடையாது. ஏனெனில் விமானத்தில் வெளியே இருக்கும் காற்றின் அழுத்தத்தை விட விமானத்திற்குள் அதிகமான அழுத்தம் இருக்கும். இதனால் விமானம் வானத்தில் பறந்து கொண்டு இருக்கும் போது கதவை திறக்க வேண்டுமானால் 11,300 கிலோ வரை எடை தூக்கும் திறன் இருக்க வேண்டும். மேலும் கடந்த 4 வருடங்களுக்கு முன்பாக 17 வயது பெண் ஒருவர் விமானம் தரையிறங்கும் போது காற்று வாங்குவதற்காக எமர்ஜென்சி டோரை திறந்து வைத்துள்ளார். இப்படி கூட சில புத்திசாலிகள் நாட்டில் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பது இதை பார்க்கும் போது தான் தெரிகிறது.