Categories
அரசியல் மாநில செய்திகள்

வானத்துக்கும் பூமிக்கும் குதிக்காதீங்க…! ”நாங்க ரூ.6,000”… நீங்க வெறும் ”ரூ.4,000”… ஜெயக்குமார் அட்வைஸ் …!!

அதிமுக அரசில் ரேஷன் கார்ட் மூலமாக 6000 கொடுத்து இருக்கோம் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழக பட்ஜெட் குறித்து விமர்சனம் செய்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், திமுக பல்வேறு வாக்குறுதிகளை கொடுத்து விட்டு முழுமையான அளவுக்கு நிறைவேற்றல.. இன்றைக்கு கடன் என்று சொன்னால் ஏறக்குறைய 5 லட்சம் கோடி என்று சொல்கிறார்கள்… 5லட்சம் கோடி கடன் எப்போ ?2022ஆம் ஆண்டு  தான் அந்த கடன் வரும் என பட்ஜெட்டில் குறிப்பிட்டு இருந்தோம். இப்போ 2021ல் இருக்கிறோம். 4.75லட்சம் கோடி தான்.

இவர்கள் ஆட்சியில் வைத்த 1.50லட்சம் கோடி கடனுக்கு வட்டி யாரு கட்டுனது ? நாங்க தான் கட்டுனோம். எவ்வளவோ நிதி நெருக்கடி இருந்தாலும் கூட வாக்களித்த மக்களுக்கு என்னென்ன வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டதோ… அத்தனையும் ஐந்தாண்டு காலத்தில் நிறைவேற்றினோம்…  சொல்லாததையும் கூட நிறைவேற்றினோம்….

முதல்வராக மாண்புமிகு அண்ணன் எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்ற பிறகு… ரேஷன் கார்ட் மூலமாக 6000 கொடுத்து இருக்கோம். இவர்கள் கொரோனா காலத்தில் 4000 கொடுத்துட்டு,4000 கொடுத்து விட்டோம்… தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றி விட்டோம் என என….  பெருசா வானத்துக்கும் பூமிக்கும் குதிச்சுட்டு இருக்காங்க. 6000 ரூபாய் நாங்கள் கொடுத்தோம். பொங்கலுக்கு 2,500 ரூபாய் கொடுத்தோம். இதேவியெல்லாம் தேர்தல் அறிக்கையில் நாங்கள் சொன்னோமா ….? சொல்லாததையும் செய்கின்றோம் நாங்கள்.

அரசு ஊழியர்களுக்கு ஏகப்பட்ட வாக்குறுதிகள் கொடுத்தார்கள்….  ஆனால் இப்போது… அகவிலைப்படி உயர்வு… நீ இப்போ கேட்காத அகவிலைப்படி…. 2022 ஏப்ரலில் வாங்கிக்கோ அகவிலைப்படி என சொல்லுறாங்க… நாங்க நிதி சுமை இருந்த போது.. 7ஆவது ஊதியக்குழு வந்தது. உடனே 14,000கோடி ரூபாய் கொடுத்தோம். இன்று இவர்களால் கொடுக்க முடியுதா ? எல்லாவற்றையும் தள்ளி போடுறாங்க….

நிதி அமைச்சரின் பேச்சிலே என்ன தெரியுது ? எல்லா திட்டத்துக்கும் பரிசீலிக்கின்றோம்… குழு அமைக்கப்படும்,  இது குறித்து ஆராயப்படும், இது குறித்து பின்னர் தெரிவிக்கப்படும். நாங்கள் இதை செய்ய போறோம் என தெளிவாக சொல்லவில்லை. இந்த பட்ஜெட்டை பார்த்தல் இது டிஜிட்டல் டிமிக்கி என்று தான் சொல்ல வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்தார்.

Categories

Tech |