அனைவருமே மிரளும் அளவுக்கு ஒருவர் ஏப்ரல் ஃபூல் செய்துள்ளார். இந்த சுவாரஸ்யமான கதையை பற்றி இதில் பார்ப்போம்.
ஏப்ரல் 1ஆம் தேதி வந்த உடனே அனைவரும் மிரளும் அளவுக்கு ஒருவர் ஏப்ரல் ஃபூல் செய்து விளையாடுவார்கள். சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவருமே ஏப்ரல் 1ஆம் தேதி என்று அனைவரையும் ஏப்ரல் ஃபூல் செய்து விளையாடுவது ஒரு வழக்கமாக உள்ளது. ஒருவர் மற்றொருவரை ஃபூல் செய்து விளையாடுவதில் ஒரு சிறிய மகிழ்ச்சி கிடைக்கும். ஆனால் இங்கு ஒருவர் அனைவருமே மிரளும் அளவுக்கு ஏப்ரல் ஃபூல் செய்துள்ளார். லண்டனில் 1989 ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி அதிகாலையில் லண்டனில் வசிக்கக்கூடிய மக்கள் அனைவருமே அதிர்ச்சியடையும் வகையில் ஒரு சம்பவம் நடக்கின்றது.
அது என்னவென்றால் பறக்கும் தட்டு வந்து கொண்டுள்ளது. அதைப் பார்க்கும்போது ஏலியன்ஸ் போன்று உள்ளது. இதை பார்த்து பயந்து போன மக்கள் அந்நாட்டினுடைய காவல்துறை மற்றும் அரசிடம் இதுதொடர்பான தகவலை தெரிவிக்கின்றனர். பின்னர் அந்நாட்டு அரசும் ராணுவத்தை அலாட் செய்கிறார்கள். சிறிது நேரம் கழித்து அந்த தட்டு பூமியை நோக்கிக் கீழே வருகின்றது. அப்போது தான் தெரிகிறது அது பறக்கும்தட்டு இல்லை அது பறக்கும்தட்டு வடிவில் உருவாக்கப்பட்ட ஒரு பறக்கும் பலூன் என்றும், பின்னர் காவல்துறையினர் அவரை தொடர்பு கொண்டு பேசிய அந்த பலூனை கீழே இறங்குகிறார்கள். அதில் இருந்து வெளியே வந்த நபர் ஏலியன் போன்று முகமூடி அணிந்து வெளியில் வருகிறார். அவரது பெயர் ரிச்சர்ட்சன். இவர் லண்டனில் இருக்கக்கூடிய மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவர். இவர் மக்கள் அனைவரையும் ஏப்ரல் ஃபூல் செய்ய வேண்டும் என்பதற்காக இதுபோன்று செய்ததாக தெரிவித்தார்.